மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மாறாக, கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஒரு ஊராட்சி தலைவரே குடிநீர் இணைப்பிற்கு முறையான ரசீது வழங்காமல் பொது மக்களிடம் ரூ 9 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை வசூலிப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்ததுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் குடிநீர் இணைப்பிற்காக தங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அரசின் இலவச குடிநீர் திட்டத்திற்குப் பணம் வசூலித்த ஊராட்சி தலைவர் - இலவச குடிநீர் இணைப்பு திட்டம்
கன்னியாகுமரி: குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ரூ 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டாயமாக வசூலிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.