கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (டிசம்பர் 14) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "விவசாயிகளுக்கு எதிராக உள்ள சட்டங்கள் குறித்து மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக போராடும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கும்.
பெருநிறுவன முதலாளிகள் லாபம் பெற இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்" என்றார.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு...மு.க.ஸ்டாலிக்கு அமைச்சர் கேள்வி