மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து " ஒரே இந்தியா,ஒரே தேசம் " என்ற ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜீப் பயணம் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரி தொடங்கி நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து 11 மாநிலங்களைக் கடந்து காஷ்மீரைச் சென்றடைய உள்ளது.
இந்த விழிப்புணர்வு ஜீப் பயணத்தின் போது " ஒரே இந்தியா, ஒரே தேசம் " என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளைப் பயணப் பாதைகளில் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
இதையும் படிக்க:சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள காந்தி மண்டபம்! - அலட்சியம் காட்டும் அரசு