ETV Bharat / state

நூற்றாண்டு பழமையான சந்தையை அப்புறப்படுத்த அலுவலர்கள் முயற்சி

கன்னியாகுமரி: களியக்காவிளை பகுதியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யவதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தையை அப்புறப்படுத்த அலுவலர்கள் முயற்சித்துள்ளனர்.

கன்னியாகுமரி
author img

By

Published : Aug 4, 2019, 10:22 PM IST

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்தை உள்ளது. இந்த சந்தையை அருகிலேயே பேருந்து நிலையமும் உள்ளதால், குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், வியாபாரிகளும் பொருட்களை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

களியாக்கவிளையில் உள்ள சந்தை

ஓட்டம் சத்திரம், ஓசூர், நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள், வாழை தார்கள் மட்டுமின்றி உள்ளூரில் விளையும், கிழங்கு, கீரை, உள்ளிட்ட பொருட்களும் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள், மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடந்து வரும் நிலையில், இந்த சந்தையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கும் வகையில் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த அரசு 3 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்து சந்தையை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

சந்தை அப்புறப்படுத்தப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், எனவே பேருந்து நிலையம் அடுத்த காலி நிலத்தில் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தையை அப்புற படுத்த அதிகாரிகள் முயற்சி.பல்லாயிர கணக்கான விவசாயிகள் .வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அவலம்.சந்தையை பாதிக்காமல் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வியாபாரிகள் கோரிக்கை.Body:tn_knk_03_busstant_extension_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தையை அப்புற படுத்த அதிகாரிகள் முயற்சி.பல்லாயிர கணக்கான விவசாயிகள் .வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அவலம்.சந்தையை பாதிக்காமல் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வியாபாரிகள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான மிக பழமை வாய்ந்த சந்தை உள்ளது. இங்கு அருகிலே பேருந்து நிலையமும் உள்ளதால் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் தினமும் பல்லாயிர கணக்கான பொதுமக்களும் வியாபாரிகளும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் ஓட்டம் சத்திரம் , ஓசூர், நெல்லை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் வாழை தார்கள் மட்டுமின்றி உள்ளூரில் விளையும், கிழங்கு, கீரை, உள்ளிட்ட பொருட்களும் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்கின்றனர். மேலும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் மீன்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்கின்றனர். தினசரி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடந்து வரும் நிலையில் இந்த சந்தையை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அருகில் உள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த அரசு 3 கோடியே 15 லட்சம் ஓதிக்கிடு செய்து சந்தையை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சந்தை அப்புறப்படுத்தப்பட்டல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் எனவே பேருந்து நிலையம் ஒட்டி உள்ளதேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீணாக இருக்கும் நிலத்தில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.