கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம், கடியபட்டனம், குளச்சல் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட ஈரான் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஈரானில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயிருக்கு பயந்து தொழிலுக்கு செல்லாமல் அங்குள்ள தீவுகளில் மீனவர்கள் தஞ்சம் அடைந்தனர்.
தங்களை காப்பாற்றி சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப்பில் அவர்கள் வீடியோ அனுப்பினர். இதனையடுத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், டூரிஸ்ட் விசாவில் சென்றவர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால் மீனவர்களை சொந்த ஊர் அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.
இதற்கிடையே, தூதரக அலுவலர்களை ஈரானில் உள்ள மீனவர்கள் தொடர்பு கொண்டபோது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை மீட்க 15 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவு மட்டும் உண்டு உயிர் வாழும் மீனவர்கள் உணவு இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா: தங்களைக் காக்க வலியுறுத்தி வாட்ஸ்அப் காணொலி வெளியிட்ட மீனவர்கள்!