தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல நடிகை நயன்தாரா, 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் வேடத்தில் நடிக்கயிருக்கிறார்.
இந்தப் படம் கன்னியாகுமரி பகவதியம்மனின் மகிமையைச் சொல்லும் படமாக தயாராக உள்ள காரணத்தினால், அவர் படத்திற்காக விரதமிருந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படம் முழுக்க முழுக்க குமரியில் படமாக்கப்பட உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று இரவு திடீரென்று பகவதியம்மன் திருக்கோயிலுக்கு விசிட் அடித்த நடிகை நயன்தாராவை, கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காதலர்களான விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அரை மணி நேரம் பகவதி அம்மன் முன்பு நின்று, மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தனது ரசிகர்கள், ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சிரித்த படி கையசைத்துக்கொண்டே, தனது காரில் ஏறிப் புறப்பட்டார், நயன்தாரா.
இதையும் படிங்க: