ETV Bharat / state

இடியும் நிலையில் நரிக்குளம் பாலம் -  நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை - மத்திய மாநில அரசு

கன்னியாகுமரி: நரிக்குளம் பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட பாலத்தின் கான்கிரீட் உடைந்து இடியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நரிக்குளம் பாலம் -
author img

By

Published : Sep 9, 2019, 8:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் பகுதியில் 29.18 கோடி ரூபாய் செலவில் சாலை மற்றும் பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்துவைத்தார். இந்த பாலத்தில் தற்போது போக்குவரத்து நடைமுறையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இந்த பாலத்தை பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதியில் விரிசல் எற்பட்டு கற்கள் குளத்திற்குள் விழுந்துள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் நரிக்குளம் நிரம்பிவருகிறது. இந்த நிலையில் பாலப்பகுதியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் பலவீனம் அடைந்து இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இடியும் நிலையில் நரிக்குளம் பாலம்

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ’இந்த பாலம் அமைக்கும்போது தரமற்ற முறையில்தான் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மழையால் பெரிய பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி நரி குளம் பகுதியில் 29 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாலத்தின் கான்கிரீட் கரை உடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் பணி செய்ததால் தான் அடைந்ததாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மத்திய மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Body:கன்னியாகுமரி நரி குளம் பகுதியில் 29 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாலத்தின் கான்கிரீட் கரை உடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் பணி செய்ததால் தான் அடைந்ததாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மத்திய மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மதுரை- கன்னியாகுமரி வழித்தடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நரிகுளம் அருகே சாலை பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளால் நரிக்குளம் அருகே 550 மீட்டர் வரை சாலை,பாலப் பணிகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டன .10 ஆண்டுகளாக இந்த பணிகள் கிடப்பில் இருந்ததால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பல கிலோமீட்டர் சுற்றி சென்றனர். ஒருவழியாக வழக்குகள் முடிந்ததும் 29.18 கோடி ரூபாயில் சாலை மற்றும் பாலப் பணிகள் முடிக்கப்பட்டன .கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திர மோடி பாலத்தை திறந்து வைத்தார். பாலம் திறந்து முதல் அதில் ஏதாவது பிரச்சினை இருந்து வருகிறது .திறந்து 3 மாதங்களிலேயே அப்போது பெய்த ஒரு நாள் இரவு மழையில் பாலத்தின் ஒரு பகுதி பெரியளவில் விரிசல் ஏற்பட்டது. இது பின்னர் சரி செய்யப்பட்டது. தற்போது இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குளம் தற்போது நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது பாலத்தின் கரையில் பெரிய பெரிய விரிசல் ஏற்பட்டு பாலத்தின் கான்கிரீட் கரைகள் உடைந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த பகுதி பொதுமக்கள் இன்று பாலப்பகுதியில் கூடி தரமற்றமுறையில் பாலம் அமைத்ததால் தான் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடங்களுக்குள் விரிசல் ஏற்பட்டு காங்கிரீட் கரைகலெல்லாம் இடிந்து விழுகின்றன என்று மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது இந்த பாலம் அமைக்கும் போது தரமற்ற முறையில் தான் அமைத்தனர். இதனால்தான் நாங்கள் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் தற்போது இந்த பாலத்தில் அடிக்கடி பெரிய பெரிய விரிசல் விழுந்து சர்ச்சைக்கு உள்ளாகிறது. தற்போது இந்த மழைக்கு பெரிய பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது .இதனால் இந்த பாலம் தற்போது மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது .அப்படி மண்ணுக்குள் புதைந்த இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும் .மேலும் இந்த பாலத்தில் வரிசையாக மின்விளக்குகள் இருந்தாலும் அவை இதுவரை எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாகச் செல்வோர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி குடிமகன்கள் ரோட்டின் ஓரத்திலும் பாலத்தின் அடியில் அமர்ந்து மது அருந்துவதால் வழியாக பெண்கள் தனியாக செல்ல முடிவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை .சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று சொல்லுங்கள் என்று அழைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மத்திய மாநில அரசு உடனடியாக தலையிட்டு இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.