ETV Bharat / state

நாகர்கோவில் டூ பெங்களூருவுக்கு தீபாவளி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிப்பு

Diwali special train: தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் நாகர்கோவிலிலிருந்து பெங்களூருக்கும், பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கும் தீபாவளி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

nagercoil-to-bangalore-diwali-special-train-in-november-southern-railway-notice
நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 10:56 PM IST

கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் வேலை செய்யும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பல சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் - பெங்களூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவம்பர் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06084) நவம்பர் 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பெங்களூரிலிருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்ட்டோண்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாள்(நவ.13) விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவித்த தீபாவளி பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.