கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் சில தினங்களுக்கு முன்பு மனிதக்கழிவுகளை அள்ளுவதாக பட்டியலின மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் அந்த பணிக்காக பட்டியலின தொழிலாளர்கள் அலுவலர்களால் நிர்பந்திக்கப்படுவதாகவும் அச்செயல் சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி வடசேரி காவல் நிலையத்தில் அந்த இயக்கித்தினர் புகாரும் அளித்திருந்தனர்.
அவர்கள் பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும், மேலும் புகாரை திரும்பப் பெறக்கூறி அவர்கள் செயல்களை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், பட்டியலின மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் வடிகாலில் தூர் வாருவதை படம் பிடித்துக் கொண்டு, அம்மக்களிடம் தவறாகப் பரப்புரை மேற்கொள்வதாகவும், மேலும் அதை வைத்து தொழிலாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சாடினர். மேலும் அந்த இயக்கத்தினர் இதுபோல் பொய்ப்பரப்புரையை இனியும் தொடர்ந்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என அவர்கள் எச்சரித்தனர்.
இதையும் படியுங்க: பெண் மீது மோகம் கொண்ட 60 வயது முதியவர்; மகன்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம்!