நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் எம்.ஆர். காந்தி, பள்ளிவிளை, வாத்தியார்விளை, அருகுவிளை, கிருஷ்ணன்கோவில், வடசேரி ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது அவர் சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாகர்கோவில் தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
மேலும் தமிழ்நாட்டின் முதமைச்சரை தரைகுறைவாக விமர்சித்த ஆ.ராசா மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.