ETV Bharat / state

21ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அவலம் - ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவர் குடும்பம்

author img

By

Published : Dec 12, 2019, 9:53 PM IST

Updated : Dec 13, 2019, 9:58 AM IST

நாகை: வெளியூர் சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் குடும்பத்தை, ஊரை விட்டு ஒதுக்கியும் மேலும் அவர்களிடம் பேசுபவர்களுக்கு அபராதத்தையும் அறிவித்து சமூக புறக்கணிப்பு செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூரில் மீன் பிடித்த மீனவர் குடும்படும் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு, nagai-fisherman-family-has-been-socially-boycotted-by-panchayat-for-fishing-ouside-of-the-village
கோட்டாட்சியரிடம் புகார்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அக்கிராம நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் ஊர்க்கூட்டம் போட்டு வெளியூர் சென்று மீன் பிடிக்க லெட்சுமணனுக்குத் தடை விதித்துள்ளனர். அதனை அவர் ஏற்றுக் கொள்ளாததால், அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர்.

மேலும் அவர் குடும்பத்தினரிடம் பேசுபவர்களுக்கு ரூ.1 லட்சம் தண்டனை விதிக்கப்படும் என்றும் 'தண்டோரா' போட்டு கிராம மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

லெட்சுமணன் குடும்பத்தினர் கோட்டாட்சியரிடம் மனு

இதுகுறித்து லெட்சுமணன் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் குடும்பத்தினர் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம், தங்கள் மீது போடப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்திடவும், பூம்புகாரில் தொடர்ந்து வாழ வழி செய்யவும் கோரி புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உரிய நீதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இதையும் படியுங்க: நாகையில் வணிகர்கள் கடையடைப்பு, மீனவர்கள் வேலை நிறுத்தம்...!

Intro:Body:வெளியூர் சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய கிராமத்தினர். தங்களிடம் பேசுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அறிவித்து சமூக புறக்கணிப்பு செய்வதாக கோட்டாட்சியரிடம் புகார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த லெட்சுமணன் விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில், அக்கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ஊர்க்கூட்டம் போட்டு வெளியூர் சென்று மீன்பிடிக்க லெட்சுமணனுக்கு தடை விதித்துள்ளனர். அதனை லெட்சுமணன் ஏற்றுக்கொள்ளததால், அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், லெட்சுமணன் குடும்பத்தினரிடம் பேசுபவர்களுக்கு ரூ.1 லட்சம் தண்டனை விதிக்கப்படும் என்று தன்டோரா போட்டு கிராம மக்களுக்கு அறிவித்துள்ளனர். இதுகுறித்து, பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், லெட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் தங்கள் மீது போடப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்திடவும், பூம்புகாரில் தொடர்ந்து வாழ வழிசெய்யவும் கோரி புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உரிய நீதி பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.

பேட்டி: 1.சங்கமித்ரன் (வழக்கறிஞர்).

2.குணவதி (பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண்).Conclusion:
Last Updated : Dec 13, 2019, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.