ETV Bharat / state

'ஸ்கூலுக்கு வேணாம்... வா கூட்டத்துக்கு போலாம்' - மாணவர்களைக் கடத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

கன்னியாகுமரி: கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஏழு அரசு பள்ளி மாணவர்களை கடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Thazhakudy school students abduction
Thazhakudy school students abduction
author img

By

Published : Feb 4, 2020, 9:37 AM IST

Updated : Feb 4, 2020, 10:03 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும் அரசு மேல்நிலைப் பள்ளியும் அருகருகே அமைந்துள்ளன. இந்தப் பள்ளிக்கூடங்களில் அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் முடிந்து நேற்று வழக்கம்போல் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென அப்பள்ளி அருகே வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்துசென்ற ஏழு மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

இதைப் பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலளித்தனர். பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த வருகைப் பதிவை ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த சுதர்ஷன் (5ஆம் வகுப்பு), மாதேஷ் (4ஆம் வகுப்பு), கமலேஷ் (5ஆம் வகுப்பு), பிரின்ஸ் (4ஆம் வகுப்பு), ஹரிஷ்பாபு (9ஆம் வகுப்பு), சந்தோஷ் (6ஆம் வகுப்பு), மஜித் (3ஆம் வகுப்பு) ஆகிய ஏழு மாணவர்கள் வராமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து கண்ணீருடன் கதறியபடி பள்ளி வந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தங்கள் குழந்தைகளை மீட்கும் வரை பள்ளியைவிட்டு நகரமாட்டோம் எனக் கூறி பள்ளி வாயிற்கதவை அடைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட மாணவர்களை காவல் துறை பள்ளியில் ஒப்படைப்பு

தகவல் அறிந்து பள்ளி சென்ற காவல் துறையினர் கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்களோ மாணவர்களை மீட்டுத்தரும் வரை அங்கிருந்து நகரமாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே, நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும்படியான வேன் ஒன்று வேகமாகச் செல்வதை அறிந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர் அதனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, வேனை சோதனையிட்டதில் ஏழு பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், மாணவர்களை மீட்ட காவல் துறையினர் அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும், அவர்களைக் கடத்த முயன்ற தாழக்குடி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவரைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்பதும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், கடத்த முயன்ற நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தில் பள்ளி கூடங்களுக்கு அருகே வைத்து வேனில் கடத்தப்பட்ட ஏழு மாணவர்களை நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தேரேகால்புதூர் பகுதியில் வைத்து ஆரல்வாய்மொழி போலிசார் மீட்டனர். கடத்திய நபர் கைது . 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வை கண்டித்து ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அழைத்து சென்றதாக முதற்கட்ட விசாரனையில் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து விசாரனை.Body:tn_knk_03_students_recovery_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தில் பள்ளி கூடங்களுக்கு அருகே வைத்து வேனில் கடத்தப்பட்ட ஏழு மாணவர்களை நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தேரேகால்புதூர் பகுதியில் வைத்து ஆரல்வாய்மொழி போலிசார் மீட்டனர். கடத்திய நபர் கைது . 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வை கண்டித்து ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அழைத்து சென்றதாக முதற்கட்ட விசாரனையில் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து விசாரனை.

கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி பகுதியில் அருகருகே அமைந்துள்ளது அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு மேல் நிலை பள்ளிகள். இந்த பள்ளிகூடங்களில் அதே பகுதியை சேர்ந்த நூற்றுகனக்கான மாணவ மாணவியர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இந்நிலையில் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் முடிந்து இன்று வழக்கம் போல் பள்ளி கூடங்கள் திறந்தது மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அப்பொழுது திடிரென பள்ளி அருகே வந்து நின்றது வேன் ஒன்று அதில் இருந்த மர்ம நபர் பள்ளி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்த ஏழு மாணவர்களை பிடித்து இழுத்து வழுகட்டாயமாக வேனில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவ மாணவியர்கள் கூச்சலிட்டனர். மாணவ மாணவியர்களின் கூச்சலை கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் மாணவர்கள் வேனில் கடத்தப்பட்டத்தை அறிந்தனர். உடனடியாக பொதுமக்கள் பள்ளிக்கு சென்று தகவல் கொடுத்தார்கள். பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த வருகை பதிவை ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த சுதர்ஷன் 5 வகுப்பு மாதேஷ் 4 ம் வகுப்பு கமலேஷ் 5 ம் வகுப்பு பிரின்ஸ் 4 ம் வகுப்பு ஹரிஷ்பாபு 9 ம் வகுப்பு சந்தோஷ் 6 ம் வகுப்பு மஜித் 3 ம் வகுப்பு என ஏழு மாணவர்கள் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடணடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து கண்ணீருடன் கதறியபடி வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகதிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதோடு மாணவர்களை மீட்டுக்கும் வரை பள்ளியை விட்டு செல்லமாட்டோம் என கூறியதோடு பள்ளி வாயிற்கதவை அடைத்து விட்டு பள்ளிகூடம் உள்ளே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர் கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து பள்ளி முற்றுகை போராட்டத்திலேயே ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகம்படும்படியாக வேன் வேகமாக செல்வதை அறிந்த ஆரல்வாய்மொழி போலிசார் அதனை துரத்தி சென்று பிடித்தனர். அதில் கடத்தப்பட்ட ஏழு மாணவர்கள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக மாணவர்களை மீட்டதோடு மாணவர்களை கடத்திய தாழாக்குடி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவனையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுலை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று மாணவர்களை எதற்காக கடத்தினார் என்றும் எங்கு கொண்டு செல்ல இருந்தார் என்றும் தீவிர விசாரனை நடத்தினார்கள் . மேலும் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த பெற்றோர்களிடம் மீட்கபட்ட மாணவர்கள் அனைவரையும் ஆரல்வாய்மொழி போலிசார் பத்திரமாக ஒப்படைத்தனர். பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டு சில மணி நேரத்திலேயே மீட்கபட்டதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் மாணவர்களை கடத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.மேலும் மாணவர்களை கடத்திய நபரிடம் போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்றும் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய நடைபெற்ற கண்டன கூட்டத்திற்க்கு மாணவர்களை அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார். ஆனாலும் கடத்திய நபரிடம் போலிசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
விஷுவல் -மீட்கபட்ட மாணவர்கள்.Conclusion:
Last Updated : Feb 4, 2020, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.