ETV Bharat / state

'கூட்டுறவு சங்கத்தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிக்கு தீவைப்பு '

கன்னியாகுமரி: தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியை உடைத்து தீவைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 22, 2019, 9:18 PM IST

வாக்குப்பெட்டி

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தல் ஜுலை 7ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக , திமுக , கம்யூனிஸ்ட் , சுயேட்சை என நான்கு அணிகள் போட்டியிட்டன. மொத்தம் 1161 வாக்குகளில் 507 வாக்குகள் மட்டும் பாதிவாகி இருந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு சீட்டுகள் அடங்கிய பெட்டி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முன்னாள் தலைவரும், சுயேட்சை வேட்பாளருமான மனாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், நேற்றுஇரவு அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு நுழைந்து வாக்குப்பெட்டியை உடைத்து தீ வைத்தனர். இன்று காலையில் வழக்கம் போல் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அச்சமடைந்து உள்ளே சென்று பார்த்தப்போது வாக்கு சீட்டு எரிக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சியடைந்தனர்.

தீவைத்து எரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள்

பின்னர் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் மோப்பநாயுடன் வந்த காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறுவு சங்கத்தின் தேர்தல் முடிந்து நீதிமன்ற உத்தரவுபடி பாதுகாப்பாக வைக்கபட்டு இருந்து வாக்கு பதிவு பெட்டியை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Body:குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 07-05-2018 ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக , தி மு க , கம்யூனிஸ்ட் , சுயோட்சை என நான்கு அணிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலின் மொத்த வாக்குகள் 1161. ஆனால் தேர்தலில் 507 வாக்குகள் மட்டும் பாதிவாகி இருந்தன. இந்தநிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் தேனீ வளர்போர் கூட்டுறவு சங்க தலைவரும் சுயேட்சை வேட்பாளருமான மனாஸ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி வாக்குபதிவு சீட்டுகள் அடங்கிய பெட்டி கூட்டுறவு சங்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற 24ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து வாக்கு பதிவு பெட்டியை உடைத்து வாக்கு சீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர். கூட்டுறவு சங்க ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கபட்டு வாக்கு பதிவு சீட்டு எரிக்கபட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அலுவலர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தக்கலை சரக காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் மேப்ப நாய் ஏஞ்சல் வர வழைக்கப்பட்டு சோதனை செய்த போது அலுவலக பின்புறம் வழியாக ஓடி சிறிது தூரம் சென்று நின்றது. மேலும் அருகில் இருக்கும் நிறுவனங்களில் பொருத்தபட்டுள்ள CCTV கேமரா காட்சிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.