கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இறைச்சி வாங்க வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி இறைச்சிக் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி இறைச்சிக் கடைகளுக்குள் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்றுதான் இறைச்சி வாங்க வேண்டும். இறைச்சிக் கடைக்காரர்கள் ஏற்கனவே இறைச்சியை வெட்டி கட்டி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொது மக்களின் தேவைக்கு ஏற்ப அதனை பிரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறும் இறைச்சிக்கடைகள் சீல் வைக்கப்படும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.