ETV Bharat / state

தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் பலி

கன்னியாகுமரி: கோட்டாறு காவல்நிலையம் எதிரே இருசக்கர வாகனம் மீது மினிபேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்து
author img

By

Published : May 15, 2019, 10:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், மேலசங்கரன் குழி பகுதியை சேர்ந்தவர் நாக கிருஷ்ணமணி(42). இவர் தனது மனைவி சுதா மற்றும் மகள் பத்மபிரியா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கோட்டாறு காவல்நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த மினிபேருந்து கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதா மற்றும் பத்மபிரியா இருவரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN_KNK_04_15_ACCIDENT_DETH_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியான கோட்டாறு காவல்நிலையம் அருகே அதிவேகமாக வந்த மினி பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தாய் மகள் ஆகிய இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல சங்கரன் குழி பகுதியை சேர்ந்தவர் நாக கிருஷ்ணமணி(42). தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி சுதா மற்றும் மகள் பத்ம பிரியா (வயது 16), பத்ம பிரியாவை நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பில் சேர்ப்பதற்காக இவர்கள் 3 பேரும் நாகர்கோவில் வந்தனர். அட்மிஷன் முடிந்த பின்னர் இரு சக்கர வாகனத்தில் 3 பெரும் ஊருக்கு சென்று கொண்டு இருந்த போது போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியான கோட்டாறு காவல்நிலையம் அருகே வேகமாக வந்த மினி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர், உயிருக்கு போராடிய அவர்களை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுதா மற்றும் மகள் பத்மப்ரியா ஆகியோர் உயிரிழந்தனர், மேலும் நாக கிருஷ்ணமணி படுகாயங்களுடன் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார், உயிரிழந்த இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.