கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளர்ச்சி குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும், விவேகானந்தர் நினைவு பாறை, பகவதி அம்மன் கோயில் செல்வதற்காகவும் அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்று நாள் பயணமாக நேற்று மாலை 6 மணி அளவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் வந்தடைந்தார். இதனால் குமரி மாவட்டம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோகன் பகவத் வருகையால் நாளை முதல் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விவேகானந்தர் பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் பலத்த ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.