கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு இரண்டு நெல் சாகுபடி முறைகள் உள்ளன. இதில், கன்னிப் பூ என்ற ஆண்டின் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நெல் சாகுபடிப் பணிகளுக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (ஜூன். 4) திறந்து வைத்தார்.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 99 ஆயிரம் ஹேக்டேர் நிலங்கள் பாசன வசதி பெரும் என மாவட்ட நிர்வாகம்தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 44.66 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.89 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்பி விஜய் வசந்த், பல்வேறு கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.