ETV Bharat / state

ரஜினியும், கமலும் அதிமுகவை தொடக் கூட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

கன்னியாகுமரி: ரஜினியும் கமலும் இணைந்தால், திமுகவின் வாக்குகளைத் தான் பிரிக்க முடியுமே தவிர அதிமுக வாக்குகளில் கை கூட வைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

minister jeyakkumar
author img

By

Published : Nov 22, 2019, 2:42 AM IST

உலகம் முழுவதும் சர்வதேச மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவில் மீனவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தோல்வி பயத்தினால் திமுக தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுத்து வருகிறது. அதேவேளையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் தேதியை நீட்டித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும் இணைந்தால், திமுகவின் வாக்குகளைத் தான் பிரிக்க முடியும். அதிமுகவின் வாக்குகளில் கைகூட வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக வாக்கெடுப்பு என்பது ஏற்கக் கூடிய ஒன்று. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் முதலமைச்சரை தேர்வு செய்வது போன்றதுதான் இதுவும். இதில் தவறேதுமில்லை" என்று கூறினார்.

ரஜினி, கமலும் தொட்டு பார்க்கட்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

இதனிடையே, திருமாவளவன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழ்நாட்டில் சாதி, மத இன அரசியல் எடுபடாது. தினகரன் கட்சி குறித்து கூறுகையில், எதுவோ தேய்ந்து கட்டெறும்பான கதைதான் டிடிவி தினகரன் கதை என்றார்.

இதையும் படிங்க: கேரளாவில் நெகிழி பயன்பாட்டுக்கு விரைவில் தடை.!

Intro:தமிழகத்தில் ரஜினியும் கமலும் இணைந்தால் அவர்கள் திமுக ஓட்டை தான் பிரிக்க முடியும் அதிமுக ஓட்டை கை கூட வைக்க முடியாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.Body:tn_knk_05_jeyakumar_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
தமிழகத்தில் ரஜினியும் கமலும் இணைந்தால் அவர்கள் திமுக ஓட்டை தான் பிரிக்க முடியும் அதிமுக ஓட்டை கை கூட வைக்க முடியாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மீனவர் தினத்தையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் இன்று நாகர்கோவில் வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதுதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் தடுப்பது திமுக கட்சி தான் தோல்வி பயம் காரணமாக அவர்கள் இதனை தடுத்து வருகின்றனர் எனவேதான் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்கும் தேதியை நீட்டித் உள்ளார்கள் அதேநேரம் அதிமுக விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை முடித்து உள்ளது. தமிழகத்தில் ரஜினியும் கமலும் இணைந்தால் அவர்கள் திமுக ஓட்டை தான் பிரிக்க முடியும் அதிமுக ஓட்டை கைகூட வைக்க முடியாது. திருமாவளவன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயக்குமார் தமிழகத்தில் ஜாதி மத இன அரசியல் எடுபடாது என்றார்.மேலும் அவர் தினகரன் கட்சி குறித்து கூறுகையில் எதுவோ தேய்ந்து கட்டெறும்பான கதைதான் அவருடைய கதை என்றார். உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக வாக்கெடுப்பு என்பது ஏற்கக் கூடியது ஏற்கனவே பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் முதல்வரை தேர்வு செய்வது போன்றதுதான் இதுவும் எனவே இதில் தவறு ஏதுமில்லை என்று கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.