சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கொண்டுவந்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதி, நீரோடித்துறை முதல் இரையுமன்துறை வரையுள்ள ஏ.வி.எம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், 'அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மா என்னும் (ஏ.வி.எம்.) கால்வாயானது 1860ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி மகாராஜாவால் முன் மொழியப்பட்டு திருவனந்தபுரம், திருவல்லம், கோவளம், விழிஞ்ஞம், வெள்ளயானி, புவார், கொள்ளங்கோடு, தூத்தூர், தேங்காய்ப்பட்டணம், குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களை நீர் வழியில் இணைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு செயற்கை கால்வாய் ஆகும். இக்கால்வாய் ஜுலை 1869ஆம் ஆண்டு சேவை துவங்கப்பட்டு, கேரள மாநிலம், பூவார் முதல் தமிழ்நாடு மாநிலம், மண்டைக்காடு புதூர் வரை முடிக்கப்பட்டது. சில அறியப்படாத காரணங்களால் கன்னியாகுமரி வரை முடிக்கப்படவில்லை.
ஆரம்பத்தில் இக்கால்வாயானது நீர் வழி போக்குவரத்துக்காக கட்டப்பட்டாலும், பின்னர் பொதுமக்கள் குளிப்பதற்கும் உள்நாட்டு போக்குவரத்திற்கும் பொதுத்தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. கால்வாய் வெட்டப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டது. முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் திட மற்றும் திரவக்கழிவுகள் சேர்வதாலும் இக்கால்வாயானது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
குளச்சல் முதல் இரையுமன்துறை வரையிலான 12 கி.மீ. தூரத்திற்கு கால்வாயின் அடையாளமே தெரியாத அளவிற்கு கால்வாயானது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது, கால்வாயானது தமிழ்நாட்டில் மண்டைக்காடு புதூர் முதல் குளச்சல் வரையிலான 5 கி.மீ. நீளத்திற்கும், இரயுமன் துறையிலிருந்து நீரோடித்துறை வரையிலான 10 கி.மீ. நீளத்திற்கும் ஆக இரு நீட்சிகளாக உள்ளது. தற்போது கால்வாய்க்கும் கடற்கரைக்கும் இடையிலான பகுதிகளில் குடியிருப்புகள் அமைந்திருப்பதால், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு பல பாலங்கள் இக்கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய நீர்வழிச் சட்டம் (17/2016)-இன்படி கேரள மாநிலம், பூவாறு முதல் தமிழ்நாடு மாநிலம், கிள்ளியூர் வட்டம், இரையுமன்துறை வரையுள்ள ஏ.வி.எம் கால்வாயானது தேசிய நீர்வழிப்பாதை 15-ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே உள்ள ஏ.வி.எம் கால்வாயின் நீரோடித்துறை முதல் இரையுமன்துறை வரையிலான 8.5 கி.மீ நீளத்திற்கும், குளச்சல் முதல் மண்டைக்காடு புதூர் வரையிலான 5 கி.மீ நீளத்திற்குமான இரு நீட்சிகளையும் தற்போதுள்ள நிலைக்கு உட்பட்டு புனரமைத்து, கால்வாயிலுள்ள சகதிகளை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டுமானங்களை சீரமைத்து நீரினை வெளியேற்றம் செய்திட உரிய கட்டுமானங்களை மேற்கொண்டு கால்வாயில், சுத்தமான தண்ணீர் செல்வதற்கும் ஏ.வி.எம் கால்வாயினை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள நிலத்தடி நீர் மேம்படவும் கடல் நீர் உட்புகுதலை தடுத்து நிறுத்தும் வகையிலும், சீரமைத்து மேம்படுத்த வேண்டியுள்ளது.
ஏ.வி.எம் கால்வாய் தேசிய நீர் வழிப்பாதையாக உள்ளதால், இதனை மேம்பாடு செய்ய தேசிய நீர் வழி ஆணையத்திடம் அனுமதி பெறவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அத்தனை ஆறுகளையும் சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை 2.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பகுதிகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் ஏ.வி.எம் கால்வாயும் ஒன்று.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டபின், மற்ற கால்வாயுடன் சேர்ந்து ஏ.வி.எம் கால்வாயும் சரி செய்யப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டம், முழுமையாக விவசாயத்தையே நம்பி இருக்கின்றது.
மற்ற எந்த தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளையும், நீர் வழித்தடங்களையும் முழுமையாக சீரமைக்காவிட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாது. எனவே, அதற்காக சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட வேண்டும். முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார்'' எனத் தெரிவித்தார்.
சிறப்பு நிதி ஒதுக்கி நீர் வழிப்பகுதிகளை சரிசெய்யாவிட்டால் குமரியை காப்பாற்ற முடியாது - அமைச்சர் துரைமுருகன் - குமரி நீர் வழித்தடம் குறித்து பேசிய துரைமுருகன்
கன்னியாகுமரிக்கு என்று தனியாக சிறப்பு நிதி ஒதுக்கி ஆறு, நீர் வழிப்பகுதிகளில் சரிசெய்யாவிட்டால் கன்னியாகுமரியை காப்பாற்ற முடியாது என சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.