ETV Bharat / state

ராணுவ வீரரை அவதூறாக பேசிய காவல் உதவி ஆய்வாளர்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - காவல் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ராணுவ வீரரை அவதூறாக பேசிய காவல் உதவி ஆய்வாளர் செயல் குறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

military man
military man
author img

By

Published : May 27, 2020, 1:48 AM IST

கன்னியாக்குமரி மாவட்டம் அருமனை ஆறவிளை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கிங்ஸ், அவரின் சித்தி சுதா என்பவரை அவரது கணவர் வில்சன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு முன் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாரை, தொடர்பு கொண்டு பேசிய ராணுவவீரர் கிங்ஸை தகாத வார்த்தைகளால் உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியானது.

இதுபற்றி காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவான்ஸ் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஶ்ரீநாத் தெரிவித்திருந்தார்.

ராணுவ வீரரை அவதூறாக பேசிய காவல் உதவி ஆய்வாளர்-

இதுகுறித்து, நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.