ETV Bharat / state

எம்ஜிஆர் பொதுச்சொத்து, அனைவருக்கும் சொந்தம்- எஸ்ஏ சந்திரசேகர்

எம்ஜிஆர் பொதுச்சொத்து, அனைவருக்கும் சொந்தம் என இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் கூறினார்.

எம்ஜிஆர் பொதுச்சொத்து எஸ்ஏ சந்திரசேகர் காமராஜர் கமல்ஹாசன் விஜய் மாதா புனித தோமையார் ஆலய திறப்பு MGR is a Public Property Chandrasekhar Kanyakumari distric news கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

author img

By

Published : Jan 24, 2021, 6:52 AM IST

கன்னியாகுமரி: எம்ஜிஆர் பொதுச்சொத்து, அவரை கமல்ஹாசன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம் என இயக்குனரும் நடிகர் விஜய் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்தார்.

அஞ்சுகிராமம் மலை குகை மாதா புனித தோமையார் ஆலய திறப்பு விழாவிற்கு வருகை தந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை அதிமுகவின் தலைவர். இறந்த பிறகும் அவர் செய்த பல நன்மைகள் மக்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் பொதுச்சொத்து. கமல்ஹாசன் மட்டுமல்ல யாரு வேண்டுமானாலும் அவரை சொந்தம் கொண்டாடலாம்.
அரசியலுக்கு வருவது தான் என் ஆசை. எல்லாமே மாறி வருகிறது. தேர்தல் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாறி வருகிறது. ஏன் அரசியலும் மாறக் கூடாது. மாற வேண்டும் புதியவர்கள் வரவேண்டும். எல்லோரையும் போல் மீண்டும் காமராஜர், அண்ணாவை பார்க்க மாட்டோமோ? நானும் இறப்பதற்குள் பார்க்க மாட்டேனா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.

சசிகலா எனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்பதல்ல. முதலில் அவர் சிறையில் இருந்து வெளிவரவேண்டும். நோயில்லாமல் வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. தேர்தலை மையப்படுத்தி நான் இயக்கம் தொடங்கவில்லை” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.