கன்னியாகுமரி: பேரறிஞர் அண்ணாவை மூல ஆதாரமாக கொண்டு திமுக அரசியல் நடத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஜன.03) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். திராவிட மாடல் அரசு என பெருமைப் பட்டுக்கொள்ளும் திமுக அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியை முன் வைத்தனர்.
காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், இந்த சம்பவத்தில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குழுவின் மாவட்ட தலைவர் ஜான் சௌந்தராஜ், மற்றும் இயக்க கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா நினைவு தினம் - டீ, வடை டோக்கன் கொடுத்து கூட்டத்தைச் சேர்த்த திமுக