கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனமூலம் சந்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சந்தையில் 260 நிரந்தர கடைகள், ஏராளமான தற்காலிக கடைகள் உள்ளன.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை முறையாக செலுத்தாதால் வடசேரி சந்தை வியாபாரிகளுக்கு அலுவலர்கள் அறிவிப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், 91 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருந்த நிலையில், இன்று (பிப்.18) மாநகராட்சி அலுவலர்கள், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாடகை பாக்கி செலுத்தாத 107 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சந்தை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:
வேலூரில் பெண் மீது தாக்குதல்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!