ETV Bharat / state

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகள் கிடையாது - அமைச்சர் மா.  சுப்ரமணியன் - New buildings at Kumari Hospital

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.26 லட்சம் மதிப்பில் நோய் தடுப்பாற்றல் பகுப்பாய்வு கருவி தொடங்கி வைத்தார்- மா.சு

author img

By

Published : Dec 24, 2022, 8:06 AM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் நோய் தடுப்பாற்றல் பகுப்பாய்வு கருவி சேவையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய மருத்துவமனை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட 708 நகர்புற நல வாழ்வு மையங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்காக அதிநவீன கருவிகள் வர உள்ளது. புற்றுநோய் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகள் மருத்துவமனை மேம்பாட்டிற்கு பெரிய அளவில் திட்டங்கள் செயல்படுத்தவில்லை. ஆனால், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஜனவரி மதத்திற்கு பிறகு 1,021 மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக் துறையில் 4,308 காலி பணியிடங்கள் உள்ளது. பல நாடுகளில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது.

நாளை 1 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். எங்காவது கரோனா அறிகுறி தென்பட்டால் cluster அடிப்படையில் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

மக்கள் கட்டயமாக முகக் கவசம் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் 96 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 92 சதவீதம் மக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டு கொண்ட காரணத்தால் நோய் தொற்று ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராணுவத்தில் வேலை எனக்கூறி 57 பேரிடம் பண மோசடி: எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.