ETV Bharat / state

பரப்புரை வாகனத்தை சிறைப்பிடித்த காவல்துறை - கன்னியாகுமரியில் பரபரப்பு - police

கன்னியாகுமரி: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் நடைபெற பரப்புரை பயணத்திற்கான வாகனத்தை காவல்துறையினர் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

kanniyakumari
author img

By

Published : Aug 16, 2019, 9:00 AM IST

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் முன்பு வாகனப் பரப்புரை பயணம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த வாகன பரப்புரையை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராஜகோபால் தொடக்கி வைக்க இருந்தார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பரப்புரை மேற்கொள்ள வாகனத்திற்கு உரிய அனுமதி வாங்காததால் வாகன பரப்புரை செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறி பரப்புரை வாகனத்தை காவல்துறையினர் சிறைபிடித்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:பூரண மதுவிலக்கை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் துவங்க இருந்த பிரச்சார பயணத்திற்கான வாகனத்தை போலீசார் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Body:பூரண மதுவிலக்கை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் துவங்க இருந்த பிரச்சார பயணத்திற்கான வாகனத்தை போலீசார் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் முன்புஇருந்து வாகனப் பிரச்சார பயணம் துவங்கப்பட இருந்தது. இதற்கான வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைக்க கட்சி மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் பிரச்சார வாகனம் மேற்கொள்ள வாகனத்துக்கு உரிய அனுமதி வாங்கவில்லை. ஆகையால் வாகன பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது என்றனர். தொடர்ந்து வாகனத்தை சிறை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி வாகனப் பிரச்சார பயணத்தை துவங்க முடியாததால் அக்கட்சியின் மாநில தலைவர் காமராஜர் நினைவு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டுச் சென்றனர். இந்த வாகன பிரச்சாரம் கன்னியாகுமரி, கொட்டாரம், வழுக்கம்பாறை, நாகர்கோவில், ஒழுகினசேரி, வெள்ளமடம் ,காவல்கிணறு ,சென்று நெல்லை தூத்துக்குடி ,விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக 17ஆம் தேதி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிறைவு பெருவதாக இருந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.