நாகர்கோயில் அருகே ராமர்புதுரைச் சேர்ந்தவர்கள் ஜோசி - அருள்மேரி தம்பதியினர். இருவரும் பிரபல துணிக்கடையில் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில் கணவர் ஜோசி மீது கொலைவழக்கு ஒன்று காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜோசி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.
மேலும், கணவர் கடத்தப்பட்டாரா என்ற சந்தேகத்தில் அருள்மேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று மாதங்களாகியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்த அருள்மேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.