குமரி மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3ஆகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் ஊரடங்கை மறந்து மிகவும் சகஜமாக கடைகளுக்குச் செல்வதும், சந்தைகளில் கூட்டமாக நின்று காய்கறி வாங்குவதுமாக உள்ளனர். இதனால், குமரி மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இறங்கி பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் இலவசமாக முகக் கவசம் வழங்கும் தையல் தொழிலாளி!