ETV Bharat / state

கன்னியாகுமரி இளைஞர்கள் புதிய முயற்சி... வாட்ஸ் ஆப்பில் இணைந்து மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்! - வாட்ஸ்சப்பில் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்

குமரி: இளைஞர்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிணைந்து "குமரி நேச்சுரல் கிங்ஸ் அண்ட் குயின்" என்ற அமைப்பு உருவாக்கி, திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு சமுதாய பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்
author img

By

Published : Nov 25, 2019, 1:01 PM IST

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் குமரி ஜவான்ஸ் என்ற அமைப்பினரும், இளைஞர்களும் பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பசுமைப் புரட்சி பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதைப் போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து "குமரி நேச்சுரல் கிங்ஸ் அண்ட் குயின்" என்ற அமைப்பை உருவாக்கி குமரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக , திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடும் பணியை முதற்கட்டமாக அவர்கள் தொடங்கினர்.

மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்

இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், " குமரி ஜவான்ஸ் அமைப்பின் சமுதாய பணிகள் தங்களை ஈர்த்ததால் குமரி நேச்சுரல் கிங்ஸ் அமைப்பு உருவானதாகவும், இந்த அமைப்பில் சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கத்துடன், இணையதளம் வழியாக இணைந்துள்ள குமரி நேச்சுரல் கிங்ஸ் என்ற நண்பர்கள் குழுவினர் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நடும் சமுதாய பணியில் ஈடுபட்டனர்.Body:குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குமரி ஜவான்ஸ் என்ற அமைப்பினர் மட்டுமல்லாது இளைஞர்களும் பொது இடங்களை சுத்தப்படுத்துதல் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பசுமை புரட்சி பணியில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் முகநூல், வாட்ஸ்சப் போன்ற சமூக இணைய தளங்கள் மூலமாக ஒன்றிணைந்து குமரி நேச்சுரல் கிங்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி குமரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடும் இப்பணியை முதற்கட்டமாக அவர்கள் தொடங்கினார். குமரி ஜவான்ஸ் அமைப்பின் சமுதாய பணிகள் தங்களை ஈர்த்ததால் குமரி நேச்சுரல் கிங்ஸ் அமைப்பு உருவானதாகவும், இந்த அமைப்பில் சமூகநலப்பணிகள் தொடரும் எனவும் இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.