ETV Bharat / state

கன்னியாகுமரி முதல் நாள் வேட்புமனுத் தாக்கல்!

கன்னியாகுமரி: வேட்புமனு தாக்கலின் முதல் நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், பரப்புரையின்றி தேர்தல் களம் மந்தமாக காட்சியளிக்கிறது.

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மந்தமாக காட்சியளிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
author img

By

Published : Mar 19, 2019, 9:51 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களை இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காததால் குமரி மாவட்ட தேர்தல் களம் மந்தமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு விட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எம்பியாக இருந்தார். இதனால் அவருக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் இதுவரை பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதேபோல காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறது.

மேலும், குமரி மக்களவைத் தொகுதியில் போட்டி களத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட எந்த கட்சியினரும் தனது வேட்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் எந்த கட்சி வேட்பாளரும் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் குமரி மாவட்ட தேர்தல் களம் மந்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் தொண்டர்கள் மத்தியிலும் தேர்தல் பரபரப்பு இன்றி முடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களை இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காததால் குமரி மாவட்ட தேர்தல் களம் மந்தமாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு விட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
இங்கு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எம்பியாக இருந்தார். இதனால் அவருக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் இதுவரை பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதேபோல காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறது.
 மேலும், குமரி மக்களவைத் தொகுதியில் போட்டி களத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட எந்த கட்சியினரும் தனது வேட்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. 
 அதேபோல இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் எந்த கட்சி வேட்பாளரும் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒரு சுயேட்சை கூட வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால் குமரி மாவட்ட தேர்தல் களம் மந்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் தொண்டர்கள் மத்தியிலும் தேர்தல் பரபரப்பு இன்றி முடங்கியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.