கன்னியாகுமரி: குமரி மற்றும் நாகை மாவட்டத்தில் இருந்து 21 தமிழ்நாட்டு மீனவர்கள் மே மாதம் 5ஆம் தேதி கேரளாவில் இருந்து ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்றனர்.
அவர்கள் மீன்பிடி தொழில் செய்து விட்டு அதிகபட்சமாக 25 நாள்களுக்குள் திரும்பி விடுவர். ஆனால் தற்போது அவர்கள் சென்று 45 நாள்கள் மேலாகியும் மீனவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
எனவே மத்திய அரசு இந்திய கடற்படையை பயன்படுத்தி சர்வதேச கடல் பகுதிகளில் தேட உத்தரவிட வேண்டும். மேலும் மீனவர்கள் ஆளில்லாத தீவில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதால், தீவுப் பகுதிகளிலும் தேட உத்தரவிட வேண்டும்.
அதேபோல மீனவர்கள் இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.