கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தனி சிறப்பு வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஆறு பேர்களில் நான்கு பேர் மாநாடு ஒன்றிற்கு சென்று வந்தவர்கள்.
இந்நிலையில் அவர்கள் ஆறு பேரின் உறவினர்களை அழைத்து வந்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தனர். இதில் ஏற்கனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 8 பேரும் கரோனா தனி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க...ஊரடங்கை நீட்டிக்க மக்கள் ஆதரவு