குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
'கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த வசந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மக்கள் சேவையைப் பாராட்டி போற்றும் விதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில் அவரது முழு உருவ சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உழைப்பால் உயர்ந்த ஹெச்.வசந்தகுமார் உடல் நல்லடக்கம்!