கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் துணை ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் இன்று காலை விசாரணைக்காக தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். காலை 10 மணியளவில் குழித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் இதுவரை ஆஜர்படுத்தப்படவில்லை.
சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதால் ஏராளமான காவல் துறையினர் நீதிமன்றத்தின் வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கக் கூடாது என குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் அப்துல் நிஜாம், அக்மல்ஹசாலி, இப்ராகிம் பாதுஷா ஆகியோர் குழித்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.ஐ. வில்சன் கொலை தக்கலை காவல் நிலையத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு