சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் நேரத்தை கழிக்க முக்கடல் சங்கமம் பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர். காசி, ராமேஸ்வரத்தையடுத்து, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு முக்கடல் சங்கமத்தில் தான் மக்கள் அதிகம் கூடுகின்றனர். இந்த இடம் பல ஆண்டுகளுக்கு முன் பெரிய பாறாங்கற்களால் வடிவமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு இறங்கி செல்லவும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலையின் அழகையும் ரசிக்கி இந்த படிகள் பயன்பட்டு வந்துள்ளது.
வயதானவர்கள், சிறுவர்கள் இங்கு கடலில் கால் நினைக்க இறங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பெண்கள் கடலில் குளித்துவிட்டு படிக்கட்டில் ஏறும்போது தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, சுற்றுலாத் துறை இந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.