ETV Bharat / state

கிருஷ்ணன்கோயில் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - குமரி லாரி விபத்து

கன்னியாகுமரி: கிருஷ்ணன்கோயில் சந்திப்பு அருகே கல்குவாரிக்கு சென்ற லாரி, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

lorry accident
lorry accident
author img

By

Published : Aug 5, 2020, 7:38 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோயில் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) காலை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து குமரி மாவட்ட கல்குவாரிக்கு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி திடீரென டயர் வெடித்தது.

இதைத்தொடர்ந்து வாகன ஓட்டுநர் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தியபோது பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் சக்கரம் சிக்கியது. இதனால் டாரஸ் லாரி அப்பகுதியில் அப்படியே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போக்குவரத்து காவல்துறையினர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 10 அடி தூரம் பறந்து விழுந்த லாரி - சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.