ETV Bharat / state

குமரியில் ஒரே வீட்டில் 2ஆவது முறையாக அரங்கேறிய கொள்ளை சம்பவம் - கன்னியாகுமரி காவல்துறை

கன்னியாகுமரி: ஒற்றைப்புளி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக வீட்டை உடைத்து பணம், சொத்து பத்திரம் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி
kanyakumari theft
author img

By

Published : Jan 3, 2020, 2:13 PM IST

Updated : Jan 3, 2020, 3:02 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றைப்புளி பகுதியைச் சேர்ந்தவர் குட்டப்பன்நாயர். இவரது வீடு ஒற்றைப்புளி பிரதான சாலையில் உள்ளது. இன்று காலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட அருகில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

கன்னியாகுமரி காவல் துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் காவல் துறையினர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவை உடைத்துவிட்டு பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் தண்ணீர் மோட்டாரை இயக்கி சத்தம் ஏற்படுத்திவிட்டு பீரோவை உடைத்து உள்ளேயிருந்த சொத்து பத்திரம், வங்கி கணக்கு எண் புத்தகம், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்ததோடு கண்காணிப்புக் கேமராவின் வன்தட்டையும் (ஹார்டு டிஸ்க்) எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை

இதே வீட்டில் கடந்த மே மாதமும் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவிலிருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அப்போதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதுவரை யாரையும் கைதுசெய்யாத நிலையில் மீண்டும் அதே வீட்டில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஸ்டேசன்ல என் படம் ஏற்கனவே இருக்கு! சிக்கிய பைக் திருடி.

Intro:கன்னியாகுமரி அருகே வீட்டை உடைத்து பணம்,சொத்து பத்திரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:tn_knk_01_house_theft_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி அருகே வீட்டை உடைத்து பணம்,சொத்து பத்திரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்தவர் குட்டப்பன்நாயர். இவரது வீடு ஒற்றைப்புளி மெயின்ரோட்டில் உள்ளது. இன்று காலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அருகில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கன்னியாகுமரி போலீசுக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்துவிட்டு பின்பக்க பாத்ரூமின் ஜன்னலை அம்மிகுழவியால் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் மிக்ஸி மற்றும் மோட்டாரை இயக்கி சப்தம் ஏற்படுத்திவிட்டு பீரோவை உடைத்து உள்ளேயிருந்த சொத்து பத்திரம், பேங்க்பாஸ்புக், மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்ததோடு கண்காணிப்பு கேமிராவின் ஹாட்டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதே வீட்டை கடந்த மே மாதமும் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடதக்கது. அப்போதும் வழக்குபதிவு செய்த போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யாத நிலையில் மீண்டும் அதேவீட்டில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
Last Updated : Jan 3, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.