கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “நாங்கள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு ‘இ’ பிரிவில் படித்து வருகிறோம். எங்களுக்கு நடைபெற்று முடிந்த காலாண்டு தேர்வுக்கு பிறகு வேதியியல் பாடத்திற்கு பாடம் எடுப்பதற்கு ஆசிரியர் இல்லை. இதனால் இரண்டாம் பருவத்தேர்வு இன்னமும் நடத்தப்படவில்லை.
அதுமட்டுமின்றி செய்முறை தேர்வுக்கான வழிமுறைகளும் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை. அதனால் வேதியியல் பாடத்தில் உள்ள பாடங்களை நாங்கள் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. இப்படியே சென்றால் எங்களது உயர்கல்வி கேள்விக்குறியாக மாறிவிடும். அதனால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பங்கேற்பு!