ETV Bharat / state

அசுரவேக சிற்றுந்தால் விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - கன்னியாகுமரி மினி பேருந்து விபத்து வைரல் வீடியோ

கன்னியாகுமரி: குழித்துறை பகுதியில் சிற்றுந்து மோதி 11 மாணவிகள் காயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Kanyakumari bus accident
Kanyakumari bus accident
author img

By

Published : Dec 16, 2019, 6:40 PM IST

Updated : Apr 29, 2020, 3:48 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பழைய பாலம் பகுதியிலுள்ள தேவிகுமாரி மகளிர் கல்லூரி சாலையில் கடந்த 11ஆம் தேதி கல்லூரி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது குழித்துறை செல்ல வேண்டிய சிற்றுந்து, தடம்மாறி கல்லூரி சாலையில் அதிவேகமாகச் சென்றது.

தாறுமாறாக ஓடிய சிற்றுந்து, சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் மீதும் அங்கிருந்த வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சுஜித்திரா என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், இவ்விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், சிற்றுந்து அதிவேகமாக வந்ததுதான் விபத்து ஏற்பட காரணம் என்பதும் சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: களைக்கொல்லி மருந்து அடிப்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

Last Updated : Apr 29, 2020, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.