ETV Bharat / state

டாஸ்மாக் கடையை மூடக்கோரி குமரி மக்கள் போராட்டம்! - டாஸ்மாக் கடையை மூடக்கோரி குமரி மக்கள் போராட்டம்

நாகர்கோவில்: மணவாளக்குறிச்சி அருகே விதிமுறையை மீறி புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் போராட்டம்
author img

By

Published : Sep 25, 2019, 5:18 PM IST

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபானக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதை பின்பிற்றாமல் புதிது புதிதாக மதுபானக்கடைகளை திறந்து வருகிறது. அதைக் கண்டித்து மக்களும் தொடர் போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே படர்நிலம் வயக்கரை பகுதியில் விதிமுறைகளை மீறி இன்று திடீரென புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டது. ஏற்கனவே இதே இடத்தில் 2017ஆம் ஆண்டு திறக்க அரசு முயற்சி செய்தது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடை திறக்கப்படவில்லை.

மதுக்கடையை மூடக்கோரி குமரி மக்கள் போராட்டம்!

சிறுது காலம் கழித்து அரசு மீண்டும் அப்பகுதியில் கடையை திறந்ததால், அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்று மதியம் மதுபானக்கடையை திறக்க வந்த ஊழியர்களை சிறைபிடித்து, கடையின் முன்பு அமர்ந்து பெண்கள் உட்பட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு முறை போராட்டம் நடத்தி, மதுபானக்கடை மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் திறத்துள்ளனர். இதனால் கடையை மூடி, அங்குள்ள மதுபானங்களை எடுத்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க: சுபஸ்ரீ விவகாரம்: காவல் ஆணையர் விசாரணையை கண்காணிக்க உத்தரவு

Intro:கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே விதி முறையை மீறி புதிதாக மதுக்கடை திறப்பு. மதுக்கடை முன் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம், போலிஸ் குவிப்பு.Body:tn_knk_02_tasmac_protest_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே விதி முறையை மீறி புதிதாக மதுக்கடை திறப்பு. மதுக்கடை முன் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம், போலிஸ் குவிப்பு.

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் புதிது, புதிதாக மதுக்கடைகளை திறந்து வருகிறது. பொது மக்களும் மதுக்கடைகளை திறக்க விடாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே படர்நிலம் வயக்கரை பகுதியில் விதி முறையை இன்று திடீரென புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. ஏற்கனவே இதே இடத்தில் 2017 – ம் ஆண்டு மதுக்கடையை திறக்க அரசு முயற்சி செய்தது. பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடை மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறந்ததால் மக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் குதித்தனர். இன்று மதியம் கடையை திறக்க வந்த ஊழியர்களை சிறைபிடித்து, மதுக்கடை முன் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலிஸ் குவிக்கப்பட்டது. இராண்டு முறை போராட்டம் நடத்தி, மதுக்கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் மதுக்கடையை திறக்க முயன்றதால் பொதுமக்கள் ஆவேசமடைந்து, கடையில் உள்ள மதுபானங்களை எடுத்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.