ETV Bharat / state

புனிதராக அறிவிக்கப்பட்ட தேவசகாயம் பிள்ளை: இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம் - புனிதராக அறிவிக்கப்பட்ட தேவசகாயம் பிள்ளை

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே உள்ள மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதராக அறிவித்ததையடுத்து, கிறிஸ்தவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினர்.

Kanyakumari people celebrate canonisation of Devasahayam Pillai as saint

author img

By

Published : Feb 24, 2020, 9:04 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ஆம் ஆண்டு பிறந்தவர் நீலம் என்ற தேவசகாயம் பிள்ளை. இவர் நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவ தொண்டுகள் புரிந்துள்ளார். இறுதியில் 1752ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் கிறிஸ்தவ மத நம்பிக்கைகாக தன் இன்னுயிரை தியாகம் செய்தார்.

இவர், கிறிஸ்தவ மதத்திற்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் செய்த அருள் தொண்டுகளைக் கணக்கில்கொண்டு இவருக்கு 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி முக்திப்பேறு பெற்ற அருளாளர் என்று போப் ஆண்டவரால் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் தேவசகாயம் பிள்ளை அருளாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிகிழமையன்று போப் பிரான்சிஸ், புனிதர்களின் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பிச்சுவுடன் கலந்து பேசி மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வேண்டுததால் நடந்த அற்புதங்களை ஏற்றுக்கொண்டு அவரை புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையறிந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்த தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மகிழ்ச்சி அடைந்தனர்.

புனிதராக அறிவிக்கப்பட்ட தேவசகாயம் பிள்ளை

மேலும், அங்குள்ள தூய வியாகுல ஆலயத்தில் நேற்று (பிப். 23) பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பிராத்தனை செய்தனர். பின்னர், பரஸ்பரம் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க:ஜெயலலிதா பிறந்தநாளில் பள்ளிகளில் உறுதிமொழி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.