ETV Bharat / state

கன்னியாகுமரி மொட்டைவிலை காய்கறி சந்தை வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - மொட்டைவிலை காய்கறி சந்தை திறக்க கோரி வழக்கு

கன்னியாகுமரி: மொட்டைவிலை காய்கறி சந்தை திறக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர், கட்டிமான்கோட் பஞ்சாயத்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

மதுரை
மதுரை
author img

By

Published : Jul 22, 2020, 6:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிலை பகுதியை சேர்ந்த சுரேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எங்களது ஊரில் 300 குடும்பங்கள் 1500 மக்கள் உள்ளனர். எங்களது ஊரில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மரவள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய், தேங்காய், கீரை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயம் செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் மொட்டைவிலை சந்தையில் தினந்தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

70 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. சந்தை முடிந்தவுடன் 14 தூய்மைப் பணியாளர்களை வைத்து சந்தையை சுத்தப்படுத்தி அங்கு உள்ள பொருள்கள் அனைத்தும் அப்புறப்படுத்தி முறையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கிராமத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டைவிலை என்ற பெயரை பேரின்பம் என்ற பெயராக மாற்றுவதற்கு இரண்டு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பழிவாங்கும் நோக்குடன் ஜஸ்டின் ஜெபதாஸ் என்பவர் தனிநபர்கள் அனுமதியின்றி மொட்டைவிலை சந்தை நடத்துவதாகவும், சந்தை முடிந்தவுடன் அப்பகுதியை சுத்தம் செய்யவில்லை. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தவறான தகவல்களை கொடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து தடை பெற்றுள்ளார். இதனால் கட்டிமான்கோட் பஞ்சாயத்து மொட்டைவிலை சந்தை ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டது.

இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய அனுமதியின்றி நடைபெறும் சந்தையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். எனவே 300 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டிமான்கோட் பஞ்சாயத்து அளித்த உத்தரவை ரத்து செய்து உடனடியாக மொட்டைவிலை சந்தையை திறக்க உத்தரவிட வேண்டும் " எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், கட்டிமான்கோட் பஞ்சாயத்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.