திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்படி கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், தனது தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆகியோரிடம் சுகாதார நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரையின்படி இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளேன். ஆய்வின்போது மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் என்னுடைய சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கிக் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன். மேலும் நோயாளிகளுக்கும் கூடுதலாக வசதிகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!