சுதந்திர தினத்தை முன்னிட்டு அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை பசுமை ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின்படி, அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பலன் தரும் மரக்கன்றுகளை அழகப்பபுரம் பேரூராட்சி மற்றும் கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் தலைமையில், கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார், அழகப்பபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாமணி ஆகியோர் முன்னிலையில் திருமூலர் நகர், பொட்டல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டன.
இதையும் படிங்க: சுதந்திர போராட்ட தியாகிகளை வீடுதேடி சென்று கவுரவித்த ஆட்சியர்!