கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் கன்னியாகுமரி, மாலத்தீவு, வட இலங்கை உள்ளிட்ட கடற்பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மணக்குடி, பள்ளம், ராஜகமங்கலம் துறை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் உள்ள நாட்டுப் படகுகளும் கரை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டன.
மேலும் படிக்க: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்