சின்னமுட்டம் மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, 50 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இந்நிலையில் குமரி வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக இப்பிரச்னையை தீர்ப்பதற்கு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. இத்தருணத்தில் குமரி மாவட்டத்திற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு! தாயே மகளை கொளுத்திய கொடூரம்!
மீனவர்கள் அமைச்சரை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்த நேரத்தில், திடீரென அங்கிருந்த மீன்வளத்துறை அலுவலர்களுக்கும், மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் அந்த விவகாரத்தை உடனடியாக பேசித் தீர்க்க கூறிய நிலையில், மீன்வளத்துறை அலுவலர்கள் சில நாட்கள் போகட்டும் என்று கூறியதால் மீனவர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தங்களது பிரச்னையை உடனடியாக தீர்க்காவிட்டால் மீனவர்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.