கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகலாகவும், வளைவாகவும் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளின் வாகன ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம், உட்கோட்ட போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடைபெற்றது. மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்த இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்லச்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வாகன ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ”கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் தங்களின் லைசன்ஸை கல்வி நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வாகனங்களை இயக்க வற்புறுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படியுங்க: