ETV Bharat / state

கன்னியாகுமரியில் வீசிய சூறைக்காற்று - பல ஏக்கர் வாழை மரங்கள் சேதம் - Kanyakumari Cyclone Hurricane

கன்னியாகுமரி: கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் விழுந்து சேதமடைந்தன.

வாழை மரங்கள் விழுந்து சேதம்
வாழை மரங்கள் விழுந்து சேதம்
author img

By

Published : May 20, 2020, 8:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் பகுதியில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தென்னை மற்றும் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதமாயின. இந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி இயக்குநர் சரண்யா, தோட்டக்கலை அலுவலர் சுதா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அரசு மூலம் தகுந்த நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று புதுக்கோட்டையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் போன்ற கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாழை மரங்கள் விழுந்து சேதம்

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். தற்போது சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் அழிந்து போயிருப்பது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசுகளுக்கு எங்களைப் பற்றி கவலையும் இல்லை, கருணையும் இல்லை' - வாழை விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.