கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தோவாளையில் ஒன்றரை வயது, மூன்று வயதுடைய இரு ஆண் குழந்தைகள் உட்பட மாவட்டம் முழுவது ஒன்பது குழந்தைகள், ஐந்து கர்ப்பிணி பெண்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டு உள்ளனர்.
ஒரே நாளில் 198 பேர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி சுசீந்திரத்தைச் சேர்ந்த 57 வயது பெண்மணி, ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 45 வயது இளைஞர், 68 வயது முதியவர் என ஒரே நாளில் மூன்று பேர்கள் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: "கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும்" - திமுக