கன்னியாகுமரி மாவட்டம், தென் தாமரைக்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுசீந்திரம் சரக வட்டாரக்கல்வி அலுவலர் சோபனா குமார் தலைமை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியை ஸ்டெல்லா நேவிஸ் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் இறை வணக்கம் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். முன்னதாக சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் மருத்துவர் டேனியல் தேவ சுதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் தென் தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு இருந்து, மேளதாளத்துடன் தொடங்கி பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து ஆசிரியர்களிடம் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வளாகம்!