கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், காவல் துறையினர் கரோனா தொற்றால் அதிகளவு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உள்பட 20 காவலர்களுக்கு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. பின்னர், ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.